சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை அடையாறில் உள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதுபோன்று, தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி, மேலும் ஜெகத்ரட்சகனுக் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மதுபானம் ஆலையில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பி ஜெகத்ரட்சகன், பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016ம் ஆண்டு ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை, தனியார் மருத்துவ கல்லுரி மற்றும் கல்லூரி ஊழியரின் பட்டாபிராம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை தி.நகரில் உள்ள ஆழ்வார்கள் ஆய்வு மையத்திலும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…