அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் ஐடி அதிகாரிகள் ஆய்வு!
அமைச்சர் பாலாஜியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாக் ஒப்பதாரர்களின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26 ம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் அலுவலகத்துக்கு 10 மேற்பட்ட அதிகாரிகள் வருகை தந்துள்ளதாகவும், அலுவலக கதவுகள் திறக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.