போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!
கேன் குடிநீர் ஆலைகள் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியது. இதையடுத்து நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப, ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக நாளை உத்தரவு என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதில் மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடப்பட்டது.