இந்தி இருக்க வேண்டும் என நினைப்பது தவறானது-கே.எஸ். அழகிரி
இந்தி இருக்க வேண்டும் என நினைப்பது தவறானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி பரவலாக பேசப்படும் மொழி, ஆனால் எல்லோராலும் பேசக்கூடிய மொழி அல்ல . மாநில மொழிகள் இருக்கக் கூடிய இடங்களில் இந்தி இருக்க வேண்டும் என நினைப்பது தவறானது என்று தெரிவித்துள்ளார்.