தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என கூறுவது தவறானது – பன்னீர்செல்வம்
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என கூறுவது தவறானது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்,தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்.தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என கூறுவது தவறானது.அதிகாரத்திற்குட்பட்டு தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.