அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தவறு – தங்கம் தென்னரசு
- தமிழகத்தில் பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
- அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது என்பது தவறான ஒன்று என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டு பாகங்களாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது 5 தமிழக அமைச்சர் கொண்ட குழுவை அமைத்து சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய உள்ளது.இந்நிலையில் இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது. நெடுஞ்சாலை துறையில் 3000 கோடி ரூபாய், காவல் துறையில் கருவி வாங்கியதில், சுகாதார துறை, உள்ளாட்சி துறைகளில் ஊழல் நடந்து வருகிறது என்றார்.
இந்த ஆட்சியில் பட்டியல் அளவில் இல்லமால் ஒரு புத்தகம் போடும் அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலை இரண்டாக பிரிப்பது தவறு அண்ணா பல்கலை மத்திய அரசு கபளீகரம் செய்கிறது இதற்கு மாநில அரசு துணை போகிறது .மேலும், இதனால் தமிழக மாணவர்களுக்கான 69 % இட ஒதுக்கீடு உரிமை பறிபோகும் என்று தெரிவித்தார்.