காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து ரஜினி விமர்சிப்பது தவறு-கே.எஸ்.அழகிரி
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ,ராகுலுக்கு காங்கிரசின் மூத்த தலைவர்களை கையாளுவதில் சிக்கல் இருக்கலாம் என்றும் ராகுல் தலைவர் தலைவர் பதவியிலிருந்து விலக கூடாது என்றும் கூறினார்.
ரஜினி கருத்து தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து ரஜினி விமர்சிப்பது தவறு.காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது . ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தாலும், அவர் ராஜினாமா செய்ய கூடாது என்பதில் காங்கிரஸ் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.