ஒரு மதத்தை சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுப்படுத்தி பேசியது தவறு.. குஷ்பு.!
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசியது சரியா..? என்றும் கட்சி மாறுவதை விமர்சிக்கும் தலைவர் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை கண்டிக்காதது ஏன்..?
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமாவளவனை கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஏன்..? கண்டிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.