மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘உயர் புகழ் கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது.
அந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்று எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலையில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…