அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது – கனிமொழி எம்.பி

Default Image

அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.

நாகர்கோவிலில் அரசு பேருந்தில் ஏறிய, குறவர் குடும்பத்தினரின் உடமைகளை நடத்துனர் ரோட்டில் தூக்கி வெளியில் எறிந்து, குடும்பத்தோடு பேருந்தில் இருந்து வெளியே அனுப்பியுள்ளார். வயது முதிர்ந்த தாய், தந்தை இருவருடனும் வந்த ஒரு குழந்தை மூவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டு, அவர்களது உடமைகளை வெளியில் தூக்கி எறிந்து வெளியே செல்லுங்கள் என கூறுகிறார்.

குழந்தை எதற்காக இறக்கி விடப்படுகிறோம் என்பதே தெரியாமல் கதறி அழ,  முதியவர் என்ன செய்வதென்று அறியாமல் நடுரோட்டில் நின்றுள்ளார்.  இதனையடுத்து, அந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணிநீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்