தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவதும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரியில் படித்து வந்த 22 வயதான ஸ்வேதா என்பவர் அவரின் ஆண் நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி விட்டு, அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இருவரும் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சுவேதா உயிரிழந்தார். ராமச்சந்திரன் உயிர்பிழைத்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி இன்று நான் அறிக்கை வெளியிட்ட நிலையில், தாம்பரம் தனியார் கல்லூரி மாணவி செல்வி சுவேதா, இன்று, தாம்பரம் இரயில் நிலையம் வாயிலில் கத்தியால் பட்டப் பகலில் குத்தி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவதும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுபோன்ற கொலைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செல்வி சுவேதாவின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…