வன்முறை பாதையில் தமிழ்நாடு சென்று கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது – ஓபிஎஸ்
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என ஓபிஎஸ் ட்வீட்
கிருஷ்ணகிரி அருகே ஜெகன் என்ற இளைஞர், சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் செய்த இளைஞரை, பெண் வீட்டார் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தேசிய நெடுஞ்சாலையில், பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாக வன்முறை பாதையில் தமிழ்நாடு சென்று கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தேசிய நெடுஞ்சாலையில், பட்டப் பகலில்
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாக வன்முறை பாதையில் தமிழ்நாடு…
— O Panneerselvam (@OfficeOfOPS) March 22, 2023