செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதன்படி, அமலாக்கத்துறை தரப்பு வாதத்தில், ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டன. செந்தில் பாலாஜி தங்களை இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த விடாமல் தடுத்தார்.
வாக்குமூலம் பெற முயற்சித்த போது அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்திற்கு வலுவான காரணங்கள் இருந்ததால் தான் கைது செய்தோம். நாங்கள் கைது செய்து வைத்துள்ள ஒருவர் காவலில் இருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டு 15 நாட்கள் கழித்து வந்து உங்களுக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் முடிந்து விட்டது.
எனவே, இனி காவலில் எடுத்து விசாரிக்க கூடாதென சொல்ல முடியுமா? அதே போல் தான் செந்தில்பாலாஜி விவகாரத்தை கருத வேண்டும். இதனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தது மற்றும் தற்பொழுது நீதிமன்ற காவலில் இருப்பது ஆகியவற்றை விசாரணை காலமாக கருதக் கூடாது. அப்படி கருதினால் செந்தில் பாலாஜி சட்டத்தை உடைக்க நாம் அனுமதிக்கிறோம் என்று பொருளாகின்றது என அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும். விசாரணை நபரை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே நீதிமன்ற காவல். மருத்துவமனையிலோ, சிறையிலோ சென்று விசாரிப்பது நீதிமன்ற காவலாக இருக்காது என கூறி தனது தரப்பு வாதங்களை முடித்து கொண்டது அமலாக்கத்துறை. இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது மிக மிக அவசியம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை நிறைவு செய்ததை அடுத்து, அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி, மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…