மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதல்வர் பேச்சு.
மழைக்காலங்களில் அயராது உழைத்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மழை வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் நான் உரையாற்றுகிறேன். மழையோ, வெள்ளமோ ஏற்படும் முன் தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்துவோம் என்று உறுதி ஏற்று மிகப்பெரிய சாதனையை அரசு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மழை, இந்த மழையை ஒப்பிட்டு பார்த்தால், சமூக வலைதளங்களில் மக்கள் அரசை பாராட்டியுள்ளனர். ஆனால் அரசு பாராட்டு மழையில் நனைவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் காரணம். அமைச்சர்கள், மேயர் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் பணியாற்றினர்.
மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் சிரமம். மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…