ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைத்தது வருத்தமளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனோ தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு உயிரிழந்த 28 முன் கள பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அறிவித்த தொகையை வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டும். இதன்மூலம் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்; அரசுக்கும் அதிக செலவு ஏற்படாது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…