பேச்சாளரால் தான் ஒரு ஆட்சியை அமைக்க முடியும் – பன்னீர் செல்வம்

பேச்சாளரால் தான் ஒரு ஆட்சியை அமைக்க முடியும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இலக்கிய அணி சார்பில் அதிமுக பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது .முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர் .
அப்பொழுது துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில்,பேச்சாளரால் தான் ஒரு ஆட்சியை அமைக்க முடியும். அமைத்த ஆட்சியை நீட்டிக்க வைக்க முடியும். இதற்கு மறைந்த முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் என்று பேசினார்.