மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை.. சட்டத்துறை அமைச்சர் பேட்டி!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்என் ரயில் தாமதித்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஆளுநரின் செயல் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய சரமாரி கேள்வி எழுப்பி, ஆளுநருக்கு செக் வைத்துள்ளது. இவ்வழக்கு விசாரணையின்போது, மசோதாக்கள் தொடர்பான பிராமண பத்திரம் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஒருசில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக அரசு இயற்றிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை உடனடியாக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதா பிரச்சனை தான் தமிழகத்தில் இன்றைக்கு தலைப்பு செய்தியாக வந்துகொண்டு இருக்கிறது.
அதிமுகவுக்கு சிக்கல்.. 2 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை… ஆளுநர் அனுமதி
இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அண்மையில் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம்.
ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு அனுமதி தந்ததை ஆளுநர் அன்றே தெரியப்படுத்தி இருக்கலாம் என்றும் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததை சிபிஐக்கு தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஆளுநர் அலுவலகம் சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.