விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை – ஸ்டாலின்
விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரத்து குறைவு காரணமாக தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும்.
அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும் – அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை! https://t.co/7iTW556hVE
— M.K.Stalin (@mkstalin) November 4, 2019
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அத்தியாவசியப் பொருள்களை சிரமமின்றி கிடைக்க செய்வதும், அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை.
அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.