கர்நாடகாவில் பிரச்னையை உருவாக்குவது பாஜகவினர் தான் – கேஎஸ் அழகிரி பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, முன்பு இந்திரா காந்தி ஒரு பெரிய ராணுவ பலத்தை வைத்துக்கொன்று எல்லோரையும் மிரட்டுகிறார் என்கின்ற ஒரு செய்தி வந்தது. பர்மா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நமக்கு பிரச்சனை இருந்தது. எனவே, அண்டை நாடுகள் எல்லாமே நமக்கு எதிராக ஐ.நா சபை உள்ளிட்ட மற்ற இடங்களில் பேசினார்கள்.

அப்படி ஒரு நட்புக்கரமாக எந்த வகையிலும் யாருக்கும் பயன்படாத ஒரு சிறிய நிலப்பகுதியை இலங்கையில் இருப்பவர்கள் தங்களது வலையை காய வைத்துக்கொள்ளலாம், வரலாம், போகலாம் மற்றும் தமிழ் மீனவர்களும் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு அன்றைக்கு இந்திய அரசாங்கம் கச்சத்தீவை கொடுத்தார்கள். இதில் இருவேறு கருத்து வேறுபாடு இருந்தது, ஜனநாயக நாட்டில் இதுபோன்று இருக்கும்.

அதை போய் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் அரசு துரோகம் செய்துவிட்டார்கள் என கூறுகிறார்கள். அதெல்லாம் துரோகம் கிடையாது, அப்படி பார்த்தால் ராஜிவ் காந்தி, இந்திய விமானத்தை எடுத்துக்கொண்டு அவர்களின் எல்லையை தாண்டி சென்று அனுமதி இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும், யாழ்ப்பாணம் தமிழகர்களுக்காகவும் உணவு பொட்டலங்கள் வழங்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

அன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் கண்டனத்தை தெரிவித்தது, அதை பொருட்படுத்தாமல் நாங்கள் தான்  செய்தோம், காங்கிரஸ் தான் செய்தது. இது எவ்வளவு பெரிய சேவை, தைரியமான விஷயத்தை காங்கிரஸ் தான் செய்தது. இதனால் சீமான் காங்கிரஸுக்கு எதிராக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சீமான் பேசுவது தவறு, அவரை எங்கள் கட்சியில் இருக்கும் ராகுல் கொதிக்கும் தெரியாது, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரியாது என்றார்.

என்றைக்கும் என்னை அழைத்து சீமானுக்கு எதிராக பேசுங்கள் என கூறவில்லை. நான் சீமானை தனிப்பட்ட முறையில் எதிராக பேசுனது கூட கிடையாது. இந்திய ஒற்றுமைக்கு எதிராக சீமான் பேசி வருகிறார். இந்தியாவில் ஒரு கலவரத்தை தூண்டும் விதமாக பேசுகிறார். மாநிலங்களுக்கிடையே இன கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இது ஒரு நல்ல அரசியலே கிடையாது என தெரிவித்தார். இதன்பின் காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பிரச்சனையை உருவாக்குவது பாஜகவினர் தான் என குற்றசாட்டினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

8 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

10 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

11 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

11 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

12 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

12 hours ago