விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளிமாநிலங்களைச்சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையில், தமிழக முதல்வரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது மே மாதத்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளது. இதனை எப்படி நிவாரணம் என்று ஏற்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் இந்த ஊரடங்கில் தாக்குப்பிடிக்க முடியும். அவர்களுக்கு எந்த வித நிவாரண அறிவிப்பும் இல்லாமல் முழு அடைப்பை நீட்டிப்பது பட்டினிச்சாவுகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…