உமா மகேஸ்வரி கொலைக்கான பின்புலம் இன்னும் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது- கனிமொழி
நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கான பின்புலம் இன்னும் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.