மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு ஒரு கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில், மாநிலத்தில் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர்.எனவே மாதவிடாய் காலமான 4 நாட்களுக்கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இந்த மாதிரியான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், மராட்டியத்தில் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க கரும்பு வெட்டும் பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வதாக அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.இத்தகைய கொடுமைகளை தடுக்க பெண் தொழிலாளர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…