உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஓன்று வைரலாகி வந்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.மேலும் அங்கு தொலைபேசி மற்றும் இணைய சேவையையும் ரத்து செய்தது மத்திய அரசு.குறிப்பாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வந்தாலும் ,ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,மெஹபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்னும் வீட்டுக்காவலிலே உள்ளனர்.
இதற்கு இடையில் தான் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஓன்று வைரலாகி வந்தது.சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் வெளியான கைப்படத்தில் தாடியுடன் உமர் அப்துல்லா இருப்பது போன்று வெளியானது.இந்நிலையில் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,உமா் அப்துல்லாவின் படத்தை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. உரிய நடைமுறையோ, விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல காஷ்மீா் தலைவா்கள் பற்றியும் மிகுந்த கவலை அளிக்கிறது.காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களையும் உடனடியாக மத்திய அரசு விடுவிப்பதுடன், அங்கு மீண்டும் அமைதியான நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…