எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.1கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது – மு.க.ஸ்டாலின் கடிதம் .!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி முடிவெடுக்க இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
#CoronaVirus தடுப்புக்கான #Lockdown 18 நாட்களை கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு @arivalayam ஆதரவு தொடரும்.
மக்களின் பாதுகாப்புக்கான கருத்துகளை வலியுறுத்தி @CMOTamilNadu-க்கு கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/vQZucV1pr5
— M.K.Stalin (@mkstalin) April 11, 2020
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் , தமிழகத்தில் ஊரடங்கு குறித்து உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள். மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எம்எல்ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.