செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? அமலாக்கத்துறைக்கு அனுமதி கிடைக்குமா.? இன்று தீர்ப்பு.!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு தற்போது 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து புழல் சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதய அறுவை சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு நேற்று அமைச்சர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே போல, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உய்ரநீதிமன்றத்தில் அவரது குடும்பத்தார் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கான கோரிக்கை பற்றிய நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா ? அல்லது அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.