Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தமாக 102 தொகுதிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இன்று காலை முதல், 9 மணி வரையில், தமிழகத்தில் 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியது. அடுத்ததாக 11 மணி நிலவரத்தின்படி, 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியது.
அதனை தொடர்ந்து தற்போது 1 மணிநிலவரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 46.06 சதவீத வாக்குகளும், தர்மபுரியில் 44 சதவீத வாக்குகளும், அடுத்து மயிலாடுதுறையில் 40.56 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதே போல, புதுச்சேரியில் 1 மணி நிலவரப்படி 44.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…