நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Tamilnadu Puducherry Election Polling

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தமாக 102 தொகுதிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இன்று காலை முதல், 9 மணி வரையில், தமிழகத்தில்  12.55 சதவீத வாக்குகள் பதிவாகியது. அடுத்ததாக 11 மணி நிலவரத்தின்படி, 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியது.

அதனை தொடர்ந்து தற்போது 1 மணிநிலவரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 46.06 சதவீத வாக்குகளும், தர்மபுரியில் 44 சதவீத வாக்குகளும், அடுத்து மயிலாடுதுறையில் 40.56 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதே போல, புதுச்சேரியில் 1 மணி நிலவரப்படி 44.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்