எச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்! – தமிழக வெதர்மேன்
இது அடர்த்தியான மழை என்பதால், வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், அதன் விளைவாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் சென்னை அண்ணாநகர் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் தற்பொழுது கனமழை பெருத்து வரும் சூழலில், இதுகுறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், இது அடர்த்தியான மழை என்பதால், வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் எந்த நகரமாக இருந்தாலும் எத்தனை அடர்த்தியான மழையை தாக்குபிடிப்பது கடினம் என கூறினார்.
அதுமட்டுமின்றி, சென்னையில் சில மணிநேரத்திலே 150 முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவர், மழைநீர் வடியும்வரை சில மணிமேரத்தில் தண்ணீர் தேங்கியிருப்பது ஒன்றுதான் எனவும் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.