தமிழகத்தில் வேதனையில் இருப்பது மக்கள் அல்ல ஈபிஎஸ் தான் – அமைச்சர் மனோ தங்கராஜ்
முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது பெரும் நெருக்கடியில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்.
மனு என்று பேசுகின்றவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், மனுவை பற்றி இவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லை கொண்டு அடிப்பார்கள். மனுவை எந்த சூழலிலும் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் வேதனையில் இருப்பது மக்கள் அல்ல எடப்பாடி பழனிசாமி தான். முதல்வராக இருந்த அவர் இப்போது பெரும் நெருக்கடியில் உள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 1 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப துறையில் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.