ஸ்டெர்லைட்டை திறப்பது அரசின் நோக்கம் அல்ல. மூடியதே தமிழக அரசு தான்.., முதல்வர்..!
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே தமிழக அரசு தான் என முதல்வர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றுள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் நாளுக்கு நாள் கொரனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஸ்டெர்லைட் அலையை நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே தமிழக அரசு தான். இந்த சூழலில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என கூறினார்.