தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தெரிவித்தார்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது .
தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் இதில் நான்கு பைசா மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு வரி கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால் அதை ஒன்றிய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும். வரி பங்கீட்டில் அநீதி நடைபெறுகிறது.
ரூபாய் 98 விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும் என தெரிவித்தார்.
கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியின் போது மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையிலும் ஒன்றிய அரசு அதிக வரி விதித்து வருகிறது. முந்தைய அதிமுக அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது. முந்தைய அதிமுக அரசு கலால் வரியை உயர்த்திய போதே பெட்ரோல் விலை ரூபாய் 100 எட்டும் என எச்சரித்தேன் என தெரிவித்தார்.
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய வரியை முறையாக வழங்கவில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…