சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்க இயலாது – அமைச்சர் கடம்பூர் ராஜு
தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்பு, திரையரங்களுக்கு தடை விதித்துள்ளது மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏராளமான மக்கள் கூடிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தமிழ்நாட்டில் தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்க கிடையாது என்று தகவல் .
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. “சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.
சினிமா திரைப்பட படப்பிடிப்புக்கு திரைத்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு தற்போது திரைப்பட படப்பிடிப்புகளை நாங்கள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.