எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை என டிஐஜி விஜயகுமாரின் பாதுகாவலர் ரவிச்சந்திரன் வாக்குமூலம்.
நேற்று காலை டிஐஜி விஜயகுமார் அவர்கள் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இடங்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் உடல் நேற்று மாலை 5 மணி அளவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தற்போது டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இவரது மரணம் குறித்து டிஐஜி விஜயகுமாரின் பாதுகாவலர் ரவிச்சந்திரன் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் 174 சட்டப்பிரிவின் படி குற்றமாக வழக்குப்பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவர் கூறுகையில், ஜனவரி மாதத்தில் இருந்தே, சரியான தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வார். நேற்று காலை என்னுடைய துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என என்னிடம் கேட்டார். அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து, ஓடி வந்து பார்த்தபோது டிஐஜி தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…