பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது – டிடிவி தினகரன்
விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே நேரடி கொள்முதல் நிலையங்களைப் போதுமான அளவிற்கு திறக்காததால், விவசாயிகள் கடும் இன்னலுக்கும், இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன.
இதையெல்லாம் சரிசெய்து விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தி.மு.க அரசு, அதற்கு மாறாக நெல் கொள்முதலில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்து விவசாயிகளை மேலும் வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது; விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதுதான் உண்மையான விவசாய நலன் என்பதை தி.மு.க அரசு உணருமா?’ என பதிவிட்டுள்ளார்.
பெயரளவுக்கு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது; விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதுதான் உண்மையான விவசாய நலன் என்பதை தி.மு.க அரசு உணருமா? (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 2, 2021