2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம் என இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உதயநிதி பேச்சு.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வு ஆகியவற்றை எதிர்த்து, அதனை திரும்ப பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தி திணிப்பை எதிர்த்து சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் முன்னேறிய மாநிலங்கள் இந்தி பேசாத மநிலங்கள் தான். இந்தியாவில் எந்த வகையில் இந்தியை திணித்தாலும் எண்களின் ஒரே பதில் இந்தி தெரியாது போடா என்பதுதான். இந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம்.
தமிழ்நாட்டில் மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். 2010 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டியடித்தது போல, 2024 தேர்தலிலும் பாஜகவை மக்கள் விரட்டியடிப்பார்கள். ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம். பிரதமர் மோடி அவர்களே, மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களே நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் தமிழக்தில் இருப்பது அதிமுக ஆட்சி அல்ல, முதல்வராக எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர் செல்வமோ இல்லை.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. இது ஆர்ப்பாட்டம் தான், போராட்டமாக மாறுவது என்பது உங்கள் கையில் இருக்கிறது. இந்தி திணிப்பை எப்போது எதிர்ப்போம் என்பதுதான் திமுகவின் கொள்கைகளில் ஒன்று. எங்களுடைய மாநில உரிமைகளை எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…