முதலமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழிந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ .1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிடுமாறு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள். கடந்த ஆட்சியிலும் கூட இதே ரூபாய் 25 லட்சம் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏதோ அதிகப்படுத்தியிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு, அதிர்ச்சியையும் அளிக்கிறது.
கடந்த வருடம் ஏப்ரல் 15ம் தேதி அன்று திமுக உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீரமானத்தை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் 6ம் தேதியன்று அதிமுக அரசு முன்களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை செய்த போது, கடுமையாக எதிர்த்த தி மு க தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், ஏப்ரல் 2020 அறிவித்திருந்த படி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக குறைத்ததை கடுமையாக ஆட்சேபித்த, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்ற திருவள்ளுவரின் குறளுக்கேற்ப, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றை பேசி விட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது மாற்றி பேசுவது அழகல்ல. ஆகவே உடனடியாக முதலமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழிந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…