தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
2021 ம் ஆண்டு சிறந்த நூலாக தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று தெரிவுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர் மற்றும் அதன் பதிப்பகத்தார்களுக்கு பரிசுகள் வழங்க கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8ஆம் நாள் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், அதன் வகைப்பாடு, நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனில், என் நூலான “மூளைக்குள் சுற்றுலா” தெரிவு செய்யப்பட்டு, நாளை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தமிழக அரசிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தெரிவு செய்யப்பட்ட எனது படைப்பிற்கு, இவ்வாண்டு நடைபெறும் விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனது படைப்பிற்கு வழங்கப்பெறும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…