ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் – முதல்வர் ஸ்டாலின்!

mkstalin -train

ஆந்திரா ரயில் விபத்தில் உயிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.  படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் பணிகளை தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் உதவிட்டுள்ளார். அதன்படி, ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாசஞ்சர் ரயிலில் பயணித்தவர்களின் விவரம் அறிந்து கொள்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் பாதை மாற்றப்பட்டுள்ளது.

ஆந்திரா ரயில் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!

இந்நிலையில், இந்த விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது X பதிவில், ஒடிசா பாலசோரில் ரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களேயான நிலையில் ஆந்திரா விஜயநகரத்தில் மீண்டுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறவிருப்பம் தெரிவிக்கிறேன்.

அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் இதனை சரி செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai
Arittapatti - Tungsten