தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமலிலுள்ள முழு ஊரடங்கு, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பும் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மற்றும் சூரிய சக்தி பெறுதல் போன்றவை மிகவும் அவசியமாக இருப்பதால், தங்கள் இருப்பிடத்தில் உள்ள வசதியை வைத்து நாள் தவறாமல் இவற்றை மேற்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பலர் தங்களது அறிவுரை கூறிவருகிறார்கள்.
அந்த வகையில், நெல்லை மருத்துவமனை மனநல மருத்துவர் ராமானுஜம் உடலுக்கு தேவையான சக்திகளை பெறுவதற்கான அறிவுரைகளை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” ஊரடங்கு மற்றும் முகக்கவசம் இரண்டுமே இயற்கையானது அல்ல, இதனால் சில பாதிப்புகள் உண்டாகும். ஆனால் இன்றயை சூழலில் அது மிகவும் அவசியம்.
மாஸ்க் நீண்ட நேரம் உபயோகிப்பதால் கட்டாயம் மூச்சுக்காற்று தடுக்கும் பாதிப்பு வரும். அதேபோல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால் உடற்பயிற்சி, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் D ஆகிய இரண்டும் இல்லாமல் உடல் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம்.
எரிச்சல், தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை ஏற்படலாம். இதனால் வீட்டில் திறந்த வெளி, மொட்டை மாடி போன்ற இடங்களில் மாஸ்க் அணியாமல் ஓரிரு மணி நேரங்கள் இருங்கள். நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள், யோகா, மூச்சுப் பயிற்சி செய்யுங்கள் இது உடலுக்கு நல்ல ஆற்றலை தரும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…