தேசிய பிரச்சனையை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது – ஜி.கே.வாசன்
தங்கள் மாநிலத்திற்கு உள்ளே உள்ள பிரச்சனையை கூட தீர்க்க முடியாத தலைவர்கள், தேசிய பிரச்சனையை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது என ஜி.கே.வாசன் பேட்டி.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி , திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் என பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டம் குறித்து, ஜி.க.வாசன் அவர்கள், தங்கள் மாநிலத்திற்கு உள்ளே உள்ள பிரச்சனையை கூட தீர்க்க முடியாத தலைவர்கள், தேசிய பிரச்சனையை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது. பலமுறை எதிர்க்கட்சிகள் ஒத்தகருத்து என கூறி, கூட்டணி முறிந்தது. அதுவே இந்த முறையும் நடைபெறும் என்பதும் எங்களது கருத்து என தெரிவித்துள்ளார்.