சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று காலை பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு காரில் புறப்பட்டார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்ததால் சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தது.
சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக எல்லைக்கு வருவதற்கு முன் தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு அதிமுக உறுப்பினர் காரில் கொடியுடன் பயணித்தார்.பெங்களூருவில் இருந்து நேற்று சென்னைக்கு கிளம்பிய சசிகலா இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் ராமாபுரம் தோட்டத்திற்கு வந்தடைந்தார்.அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்ற அவர் ,எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பிறகு அங்கிருந்து புறப்பட்ட சசிகலா தி.நகரில் உள்ள வீட்டிற்கு வந்தடைந்தார்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில்,சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம். அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…