திமுகவின் சாதனைகளுக்கு முதல்வர் உரிமை கொண்டாடுவது வேடிக்கை – முக ஸ்டாலின்.!
திமுகவில் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைவது நல்ல வேடிக்கையாகும் நகைச்சுவையாகவும் உள்ளது என்று முக ஸ்டாலின் அறிக்கை.
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு உரிமை விவகாரத்தில் திமுகவில் சாதனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிமை கொண்டாட முனைவது நல்ல வேடிக்கையாகும் நகைச்சுவையாகவும் உள்ளது என்று முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 1989ல் கலைஞர் அரசு மருத்துவர்களுக்கு இந்த 50 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கினார். தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்த சலுகையை உறுதி செய்தார் கலைஞர்.
இச்சலுகையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2001ல் தொடரப்பட்ட கே.துரைசாமி VS தமிழக அரசு வழக்கில் உரிமையை நிலைநாட்டி உள்ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது திமுக கழக அரசு. கிராமங்கள், மலைப்பகுதிகள் மிகுந்த சிரமமான பகுதிகள் ஆகியவற்றில் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து அரசு ஆணை பிறப்பித்தார் கலைஞர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 31-8-2020 அன்று உச்சநீதிமன்றம் 242 பக்க தீர்ப்பில் திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு சலுகைகள், வெயிட்டேஜ் மதிப்பெண்களை சுட்டிக்காட்டி கே.துரைசாமி வழக்கு தீர்ப்பை மேற்கோள் காட்டியே தீர்ப்பளித்துள்ளது. அரசு மருத்துவர்கள் திறமையானவர்கள் அல்ல என்ற மத்திய பாஜக அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது அரசு மருத்துவர்களின் உரிமை பாதிக்கப் படாமல் பாதுகாத்து வந்தது திமுக அரசு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1989: #PG படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு #Reservation.
1999: அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் சலுகை பொருந்தும் என GO.
2001: உயர்நீதிமன்ற சட்டப் போராட்டத்தில் கழக அரசு வெற்றி.#Weightage_Marks– என ஒவ்வொன்றாகச் செதுக்கியவர் கலைஞர்!
வரலாறு தெரிந்து பேச வேண்டும் @CMOTamilNadu! pic.twitter.com/3sXggKsD8f
— M.K.Stalin (@mkstalin) September 2, 2020