ஹெல்மெட் வாங்கினால் ‘அது’ இலவசம்.! அதிரடி காட்டிய சேலம் கடைக்காரர்.!
- இதற்கு முன் சேலத்தில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி என ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்தார்கள்.
- தற்போது சேலத்தில் உள்ள ஒரு கடையில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஹெல்மெட்டின் அவசியத்தை கொண்டு சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை புதிய திட்டத்தை கொண்டுவந்தது. அதாவது புதிய திட்டத்தின் கீழ் சுந்தர்ராஜ் மற்றும் அன்னதானபட்டி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பின்பு “நோ ஹெல்மெட் நோ என்றி” என்ற புதிய திட்டம் சேலம் மாநகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
“நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி”.! சேலத்தில் வந்தது புதிய திட்டம்.!
தற்போது, சேலத்தில் உள்ள கோட்டைப் பகுதியில் ஜம் ஜம் என்ற பெயரில் ஹெல்மெட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலத்தில் ஒரு கிலோ நடுத்தர வெங்காயத்தின் விலை ரூ.80க்கு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பின்பு இதனை கருத்தில் கொண்டு ஜம் ஜம் என்ற கடையில் ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை கடை உரிமையாளர் இலவசமாக வழங்கி வருகிறார்.
இதனிடையே, ஹெல்மெட்டின் ஆரம்ப விலை ரூ.350லிருந்து தொடங்கும் என கூறிய கடை உரிமையாளரின் புதிய வியாபார யுக்தியை பயன்படுத்தி பொதுமக்களை ஈர்த்துள்ளது.