பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது ஒவ்வொருவரின் கடமை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முக கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து வருகின்ற 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவித்தது.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.
நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிராசந்த் பூசண் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.
இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…