ராமதாஸ் கூறிய கருத்துக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.தொடர்ந்து அதிமுக கூட்டணியில் ,பாமக இருந்து வருகிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை.செய்யவும் மறுக்கிறார்கள் என்று பதிவிட்டார்.ஆனால் இவரது கருத்து அதிமுக கூட்டணியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , “தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது “. தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சிகள் தங்கள் முன்னிறுத்திக் கொள்ள இப்படி செய்வார்கள். அதை பொருட்படுத்தவேண்டாம். தற்போது வரை கூட்டணியில், எந்த பிளவும் இல்லை என்று கூறினார். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அரசின் நடவடிக்கைகள் குறித்து ராமதாஸ் பேசுவது வழக்கம் தான்.”ராமதாஸ் கூறிய கருத்துக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…