ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது – மதுரை எம்.பி பெருமிதம்.!
- கீழடியில் ஆய்வு பணிக்காக ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக மெருமிதம் தெரிவித்தார். மேலும் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், கீழடியில் உலகத் தரத்தில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை துறை சார்ந்த அறிஞர்கள் குழுவை உருவாக்கி உலகத்தமிழர்கள் வியக்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் கீழடியில் ஆய்வு பணிக்காக ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டிற்குரியது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.