“இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல”! தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!

ஜாமீனில் சிறையில் இருந்து வெளியேவரவுள்ள செந்தில் பாலாஜியையும், திமுகவையும் தாக்கி தமிழிசை பேட்டியளித்துள்ளார்.

Tamilisai Soundararajan

சென்னை : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. பல முறை அவர் ஜாமீனுக்காக வழக்கு தொடர்ந்த பொது அதனை பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் விசாரணை வளையத்தில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்த இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி வெளியில் வருவார் என கூறப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் செந்தில் பாலாஜியை வரவேற்று உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார்.  அதற்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், “செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர். எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ? சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார் தியாகி என்று கூறுவதற்கு? INDI… கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல.

காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடுமன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக, என கடுமையாக சாடினார். மேலும், முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர். 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டது மத்திய அரசினால் அல்ல.

எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு, எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை”, என தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்