வேளாண்மையைப் பெருநிறுவனங்களிடம் மொத்தமாய் கையளிப்பது நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாகும் என சீமான் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில், மாநிலப்பட்டியலிலுள்ள வேளாண்மை குறித்து மாநிலங்களின் இசைவோ கலந்தாலோசனையோயின்றி எதேச்சதிகாரப்போக்கோடு சட்டமியற்றுவதும், மக்களின் எதிர்ப்பையும்மீறி நிறைவேற்றுவதும், வேளாண்மையை முழுமையாக தனிப்பெரு முதலாளிகளுக்கு தாரைவார்த்து விவசாயிகளை சுரண்ட முற்படுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
மேலும், யாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் மத்திய பாஜக அரசின் சனநாயக விரோதப்போக்கின் நீட்சியே ஒற்றை உணவுச்சந்தையை ஏற்படுத்த முனையும் வேளாண்மைச் சட்டங்களாகும். 130 கோடி மக்களின் உணவைத் தீர்மானிக்கும் வேளாண்மையைப் பெருநிறுவனங்களிடம் மொத்தமாய் கையளிப்பது நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாகும். குடிமக்களின் உணவுரிமையை நிலைநாட்டவும், வேளாண்மையில் தற்சார்பை மீட்டெடுக்கவும் இக்கொடுஞ்சட்டங்களை எதிர்த்து நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…