நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாகும் – சீமான்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வேளாண்மையைப் பெருநிறுவனங்களிடம் மொத்தமாய் கையளிப்பது நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாகும் என சீமான் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில், மாநிலப்பட்டியலிலுள்ள வேளாண்மை குறித்து மாநிலங்களின் இசைவோ கலந்தாலோசனையோயின்றி எதேச்சதிகாரப்போக்கோடு சட்டமியற்றுவதும், மக்களின் எதிர்ப்பையும்மீறி நிறைவேற்றுவதும், வேளாண்மையை முழுமையாக தனிப்பெரு முதலாளிகளுக்கு தாரைவார்த்து விவசாயிகளை சுரண்ட முற்படுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
மேலும், யாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் மத்திய பாஜக அரசின் சனநாயக விரோதப்போக்கின் நீட்சியே ஒற்றை உணவுச்சந்தையை ஏற்படுத்த முனையும் வேளாண்மைச் சட்டங்களாகும். 130 கோடி மக்களின் உணவைத் தீர்மானிக்கும் வேளாண்மையைப் பெருநிறுவனங்களிடம் மொத்தமாய் கையளிப்பது நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாகும். குடிமக்களின் உணவுரிமையை நிலைநாட்டவும், வேளாண்மையில் தற்சார்பை மீட்டெடுக்கவும் இக்கொடுஞ்சட்டங்களை எதிர்த்து நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்.
குடிமக்களின் உணவுரிமையை நிலைநாட்டவும், வேளாண்மையில் தற்சார்பை மீட்டெடுக்கவும் இக்கொடுஞ்சட்டங்களை எதிர்த்து நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) September 21, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)