ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார் .யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான்.
அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது .
வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது.உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம்.தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…